ஆந்திராவில் 250க்கும் மேற்பட்டவர்களை மர்ம நோய் தாக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆந்திர முதல்வர். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது […]
ஆந்திரா சட்ட பேரவையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை 3 வாரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி. இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க […]
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்திற்கு மத்திய அரசின் உதவியை பெற டெல்லிக்கு 29 முறை பயணம் செய்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலப் பிரிவினையால் பாதிக்கப்படுள்ள ஆந்திராவுக்கு ஒதுக்கீடுகள் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதால் ஆந்திராவுக்கு எந்தப் பலனும் இல்லை என்ற அவர், மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் அமைச்சர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று […]
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்து இரண்டு தெலுங்கு தேச அமைச்சர்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தபோது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 19 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்றப்படாதால் தெலுங்குதேச எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜயவாடாவில் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் […]
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்தர மோடியை சந்தித்தார். தெலுங்கானா மாநிலம் உருவானபின் ஆந்திராவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சமாளிக்க வரிச்சலுகை, சிறப்பு நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை நிதி தொகுப்புகள் விடுவிக்கப்படாததால், ஆந்திர அரசு அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது, மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. source: dinasuvadu.com