ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரித்து உள்ளார். […]