இன்று சேலத்தில் நடைபெற்று வரும் இளைஞர் அணி மாநாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறிஉள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் […]
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும். இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப்பெரிய வரப் பிரசாதம். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும்,கொரோனா பாதிப்பு தற்போது சற்று குறைந்து வரும் காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி மாணவர்கள் ,பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில்,முதலாவதாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கரூரில் இருக்கும் நூலகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வில் மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் […]
சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் எதிர்கால நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு தேர்வை ரத்து செய்யுமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, […]