தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பிரபல எழுத்தாளர் கி.ரா., நடிகர் விவேக், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனா தொற்றால் காலமானார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவற்றால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் பல உயிரிழந்துள்ளனர். மேலும் சில பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் (92) அவர்கள், கடந்த ஒரு வாரமாக நுரையீரல் தொற்று காரணமாக சென்னையில் […]