ஆந்திர மாநிலம் ஆனந்தபுரத்தில் உள்ள கொத்திகோட்டா எனும் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்த சிவராமன், அவரது சகோதரி கமலம்மா, மற்றும் உறவினர் லட்சமியம்மாள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன் தனது அக்காள் கமலாம்மாவுடன் ஆனந்தபுரத்தில் உள்ள கொத்திக்கட்டா கிராமத்தில் தங்களுக்கு சொந்தமாக உள்ள சிவன் கோவிலில் தினமும் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். […]