அமெரிக்காவில் நீர் மறுசுழற்சி மையத்தை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.முதலாவதாக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்.இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீர் மறுசுழற்சி மையத்தை ஆய்வு செய்தார்.வீடுகளின் கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் வீடுகளுக்கு அனுப்பும் முறை பற்றி முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர்.