குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்பட சில முக்கிய பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தை பொறுத்தவரையில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் காந்தி மைதானத்தில் செயல்பட்டு வந்தது.பொதுமக்களும் ஆர்வமுடன் குடிநீர் பாட்டிலை வாங்கி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக இங்கு அம்மா குடிநீர் விற்பனை நிலையம் பூட்டியே கிடந்தது. கடும் கோடை வெயில் கொளுத்திய நேரங்களிலும் இந்த விற்பனை நிலையம் திறக்கப்படவில்லை இது தொடர்பாக நாளிதழ்களில் படத்துடன் செய்தி […]