சென்னை : சென்னையில் பெய்து வரும் இடைவிடாத மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கணேசபுரம் மற்றும் ஸ்டான்லி சுரங்கப்பாதைகள் தவிர, மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் முழு வீச்சில் நேற்று முதலே ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்டோர் 70 நிவாரண முகாம்களில் 2,789 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,20,174 […]