ஆசிய விளையாட்டு : இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. ஆசிய போட்டியில் ஆண்கள் குத்துச் சண்டை போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமீத் பங்கல் தங்கம் வென்றார். இதன் மூலம் 2018ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் முறையாக 66 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது.இதுவரை 14 தங்கம், 23 வெள்ளி, 29 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று இந்தியா 8வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU