மும்பை : பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்று இரவு உடல்நலக் கோளாறால் உயிரிழந்தார். அவரது இழப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் வாழ்நாளில் அந்த அளவிற்கு சாதனையையும், மனிதநேயம் மிக்க மனிதராகவும் செயல்பட்டிருக்கிறார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து […]
உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி ஆம் தேதி இரவு […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து மக்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் தமிழுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அண்மையில் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்திக்கு ஆதரவாக […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ […]
ஒரே நாடு ஒரே மொழி எனும் திட்டத்தை செயல்படுத்துவது தான் அமித்ஷாவின் நோக்கம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக ஹிந்தியை பேச வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பதற்கு தொடர்ந்து பல அரசியல்வாதிகள் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கர் பிரகாஷ் ராஜும் தற்போது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியை எங்கே பேச வேண்டும்? எங்கு கற்க வேண்டும்? என்று நினைக்கிறீர்கள். ஒரே […]
மேடையில் அமர்ந்திருந்தா அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தானில் நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படை விழாவில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவை பயிற்சி பெற்ற நாய் பூக்கூடை கொடுத்து வரவேற்றது. அந்த நாய், விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பலத்தில் நடந்து சென்று, பூக்கூடையை வாயில் கவ்வியவாறு சென்று மேடையில் அமர்ந்திருந்த அமிதாஷ்விடம் கொடுத்து, அவருக்கு முன்பாக விரிக்கப்பட்டிருந்த வெள்ளை ரெட்டில் தலைப்பணிந்து வணக்கமிட்டது. நாயின் இந்த […]
கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார். இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரூரில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது வழியில், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பாஜக தொண்டர் ஒருவரின், சாலையோர உணவு விடுதியில், […]
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேரளா முதல்வர். மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், அமித்ஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
56-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, இன்று தனது 56-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, Birthday wishes to […]
தாய் மொழியே இல்லாவிட்டாலும், இந்தி திணிப்பில் மத்திய அரசுக்கு வெறி உள்ளது என அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், முதல்வரின் தாயாருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை இந்தியில் அவர் அனுப்பியுள்ளார், இது சர்ச்சைக்குள்ளாகியது. இந்நிலையில் இது […]
மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி. மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமித்ஷா அவர்கள், ‘கடந்த 3-4 நாட்களாக சோர்வு மற்றும் உடல் வலி குறித்து புகார் அளித்து வருவதாகவும், தொற்றுநோயிலிருந்து மீண்டதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோவிட் -19 க்கு எதிர்மறையை பரிசோதித்ததாகவும் […]
தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை தமிழாக்கத்தில், 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 435 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விசிக தலைவர் தோல் திருமாவளவன் அவரது ட்வீட்டர் பக்கத்தில்,’டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர்அமித்ஷா உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக […]
இந்தியா முழுவதுமான ஊரடங்கு நீடிக்கப்படுமா? அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை. கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 4 கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு வருகின்ற 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் 5 ம் கட்டமாக ஊரடங்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இதில் முக்கியமான முடிவு […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான, பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையில் உள்ளார். இவர்களின் விடுதலைக்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாதங்கள் கடந்து விட்டன. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால் மட்டுமே தீர்மானத்தை செயல்படுத்த முடியும். ஆனால் தற்போது வரை ஆளுநர் கையெழுத்திட வில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன், […]
சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் […]
மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து அகமதாபாத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.குஜராத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வரும் வெற்றி முழக்கம் மேற்குவங்கம் வரை எதிரொலிக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். மேலும்,அவர் சூரத் தீ விபத்தில் உயிரிழந்த 22 குழந்தைகள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ் 90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளது இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை […]