இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இன்று காலை 10 காசுகள் சரிந்ததால் 64.51 ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக டாலர்களை வாங்கியதால் டாலரின் தேவை அதிகரித்தது. அதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து காலை நேர நிலவரத்தின்ப்படி, 64.51 ரூபாயாக இருந்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 69 காசுகள் அதிகரித்து ரூ.64.63 காசுகளாக உள்ளது. இதற்க்கு காரணம், உள்நாட்டு பங்குசந்தையின் உயர்வு, அமெரிக்க டாலரின் தேவை எற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே சரிந்தது, உலக அளவில் டாலரின் பலவீனம் ஆகியவையே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காரணமாகும். கடந்த வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ.65.32 காசுகளாக இருந்தது.