பிப்ரவரி 2021 இல் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தள்ளிவிட்டு, பயணி மீது எச்சில் துப்பியதற்காக நியூயார்க் பெண் ஒருவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ப்ராங்க்ஸில் வசிக்கும் 32 வயதான கெல்லி பிச்சார்டோ என்ற பெண் விமான பயணத்தில் எல்லையை மீறி நடந்துகொண்ட குற்றத்திற்காக அரிசோனா மாவட்ட நீதிமன்றத்தால் இந்த தண்டனையை பெற்றுள்ளார். மேலும் அபராதத்தொகையாக $9,123 கட்ட வேண்டும் என்றும் அவர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு 36 மாதங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார் […]
19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பல தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், முன்னணி விமான நிறுவனமான […]
கொரோனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில், முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகள் இனி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஏர்லைன்ஸில் பயணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை, இரு விமான நிறுவனங்களும் அறிவித்தனர். இரண்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்யும்போது முகமூடி அணிய வேண்டும் என்று அறிவித்தனர். முகக்கவசத்தை சாப்பிடும் போதும் அல்லது தண்ணீர் குடிக்கும் போது மட்டுமே அகற்ற வேண்டும். மேலும், அணிவரும் முகத்தை மறைக்கும்போது அவர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை பயணிகள் […]