கடந்த 2009-ம் ஆண்டு நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்த சாவேந்திர சில்வா, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டும் கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் […]