இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க […]
அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் இராணுவ […]
2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இடையேயான போர் ஆறாவது நாளாகத் நீடித்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் அமெரிக்க வாசிகளும் உயிரிழந்துள்ளனர், இந்த போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தது. தற்பொழுது, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் அமெரிக்க வாசிகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாயன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்திய 11 எண்ணிக்கையிலிருந்து தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 5வது நாளாக இன்றும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பாலஸ்தீனத்தின் காசா எல்லை பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. அதுமட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான ஹமாஸ் அமைப்பை சேர்த்தவர்கள், அதிநவீன படகுகள், பாரா கிளைடர் மூலம் இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து பல மணி நேரம் தாக்குதல் நடத்தினர். ஹமாஸ் […]