கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட Eswatini (ஸ்வாஸிலாந்து) நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினி காலமானார். நான்கு வாரங்களுக்கு முன்பு பரிசோதனை செய்ததில் ஈஸ்வதினி நாட்டின் பிரதமர் அம்ப்ரோஸ் மன்ட்வுலோ த்லமினிக்கு (52 வயது) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இன்று பிற்பகல் காலமானார் என்று துணைப் பிரதமர் தெம்பா மசுகு ஒரு அறிக்கையில் […]