அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம். புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்படத்திற்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகமும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து, […]
அம்பேத்கரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள். சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சமயத்தில், புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரைலாகி வருகிறது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் […]