தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் பாஜக மற்றும் விசிக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கபடுகிறது. அவரது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது சிலை, புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் அறக்கட்டளை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி […]
அம்பேத்கர் வழியில் பல்வேறு சீர்திருத்தங்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம். இன்று நாடுமுழுவதும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மிகப்பெரிய சிற்பி அண்ணல் அம்பேத்கர். மேலும் அவர் பொருளாதார நிபுணராகவும், நீர்நிலை மேலாண்மை வல்லுனராகவும் […]
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலை சென்னையில் ஆளுநர் மாளிகையில் திறந்து வைக்கப்பட்டது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்கனவே, […]