சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
ஆன்லைன் சூதாட்டத்தால் அம்பத்தூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது நெஞ்சை உலுக்குகிறது என ஈபிஎஸ் ட்வீட். அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் பகுதியில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் (வயது 30) என்பவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த காவலரின் உடலை கைப்பற்றி காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் ஆயுதப்படை காவலர் சரவண குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதல் […]
சென்னையில் அம்பத்தூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரகடம் முதலி தெருவில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸ் விரைந்து வந்து சோதனை […]
அம்பத்தூர் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெங்களூர் செல்லும் பிருந்தாவன் , திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னை அடுத்து அம்பத்தூர் அருகே விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக திருவள்ளூர் , அரக்கோணம் மார்க்கம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள் தாமதம். பெங்களூர் செல்லும் பிருந்தாவன் , திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில்கள் ஆங்காங்கே […]
அம்பத்தூர் பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் சிசிடிவி கட்சி மூலம் ஆராய்ந்து ரேவதி என்கிற பெண்ணை அவரது மச்சினனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த அம்பத்தூரில் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுவந்துள்ளன. அதனை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, ஒரு ரெயின் கோட் போட்ட ஒரு ஆள் செயின் பறிப்பு சம்பவம் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து […]
சென்னை அமப்த்தூரில் பெட்ரோலில் கலப்படம் செய்து விற்பனை செய்ததாக பெட்ரோல் பங்க்கை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, அம்பத்தூர் அடுத்த தொழிற்பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான H.P பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு வந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பி சென்ற சில நிமிடங்களில் வாகனங்கள் நடுவழியில் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கிற்கு திரும்பி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோலில் கலப்படம் செய்திருப்பதாக குற்றம் சாட்டிய […]