சுரேஷ் ரெய்னா : பாகிஸ்தானின் நிருபர் ஒருவரின் டீவீட்டுக்கு தக்க பதிலடி ரிப்ளேவை ரெய்னா கொடுத்துள்ளார், பின்பு அந்த டீவீட்டை டெலீட் செய்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பைக்கு தூதராக (Ambassador) ஜமாய்க்காவின் தடகள வீரர் உசைன் போல்ட், யுவராஜ் சிங், க்றிஸ் கெயில் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். தற்போது, மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடியும் இவர்களை தொடர்ந்து புதிய தூதரக ஐசிசியால் அறிவிக்கப்பட்டார். […]
சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய தூதராக மோனிகா கபில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் மோனிகா கபில் என்பவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சுவீடன் நாட்டின் தூதராகவும் இருந்துள்ளார். இது மட்டுமல்லாமல் போலந்து லித்துவேனியா ஆகிய நாடுகளிலும் இந்திய தூதராக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இங்கு பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய இடங்களிலும் இவர் நிரந்தர குழுவில் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
தமிழகத்தைச் சேர்ந்த ‘ஆஸ்கார் நாயகன்’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், வடகிழக்கும் மாநிலமான சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேங்டாக்கில் நடைபெற்ற ரெட் பாண்டா விண்டர் கார்னிவலின் துவக்கவிழாவில் பேசிய சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம்மின் அதிகாரப்பூர்வ விளம்பரத் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சிக்கிம்மிற்கு சுற்றுலா கீதம் உருவாக்கப்போகும் ரஹ்மான், விழாவிற்கு பாரம்பரிமான உடை அணிந்து வந்து, குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், சிக்கிம்மின் […]
29.12.2017 அன்று ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதியான ஹபீஸ்சாத் உடன் பாலஸ்தீனிய தூதரகத்தில் பாலஸ்தீனிய தூதர் இருந்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாலஸ்தீனிய அரசுக்கு வலுவாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்திய வெளிவிவகார துறை அமைச்சகம். இந்த நிகழ்விற்காக பாலஸ்தீன அரசு மற்றும் தலைவர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தங்களது தூதரகத்தின் செயலை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்வதாக இந்திய அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளது இந்திய […]