மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நாளை மாலை அம்பன் புயல் கரையை கடக்கிறது – வானிலை மையம் வங்க கடலில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயல் போல வலுப்பெற்றது. தற்பொழுது அது மேலும் வலுப்பெற்று, அதிதீவிர புயலாக மாறி, மேற்கு வங்க கடற்கரையில் இருந்து 630 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயல் 6 மணிநேரத்தில் 16 கி.மீ வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி […]
ஆம்பன் புயலால் தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபுனர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தென்மேற்கு பருவ மழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால், அதற்கேற்ப நிவாரணம் முகாம்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வரின் உத்தரவுப்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்பன் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட மேற்கு வங்காள விரிகுடா மற்றும் […]
ஆம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியானது வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாக்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆம்பன் புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, வரும் 20 ஆம் தேதியன்று மேற்கு […]
ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் ஆம்பன் புயல் உருவாகும். அப்படி உருவாகும் ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வராது. ஆந்திரா அல்லது வங்கதேசம் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் எங்கே […]