அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தபடியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். இதன்படி அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் […]