கோவாவில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். கோவாவில் உள்ள பனாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞருக்கும வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.3000 வேலையில்லா உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். டெல்லி மக்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம்கிடைக்கிறது. […]