அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி […]