தனது பிறந்தநாளை இன்று கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்,பல பகுதிகளில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம்,பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில்,இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவர், பிகார் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா […]
கர்நாடக சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினாக இருக்கும் சங்கரை தகுதி நீக்கம் செய்து அம்மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதன நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த 23ம் தேதி நடந்தது. அப்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஆக இருக்கும் சங்கர் பாஜக வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரித்துள்ளார். மேலும், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 23 ம் தேதி நடந்த […]
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராகுல்காந்தி அவர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என்றும் அவர் ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தின் எதிரே […]
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பின்னர் கராத்தே தியாகராஜன் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்க உள்ளேன். ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை’ ராகுலை எதிர்த்து நான் பேசவில்லை. பலமுறை என்னை காங்கிரஸில் […]
கராத்தே தியாகராஜனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது . தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் கராத்தே தியாகராஜன். இவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் இணைந்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஓன்று திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கராத்தே தியாகராஜன் பேட்டி அளித்தார்.அதில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் உள்ளாட்சி தேர்தலில் 35 % இடங்கள் வழங்க […]