மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அலையன்ஸ் ஏரின் ATR-72 விமானம் இன்று ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது விமானத்தில் சுமார் 55 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.இந்த சம்பவம் விபத்தா..? அல்லது மனித அலட்சியமா..? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) […]
அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று ஹைதராபாத்தில் இருந்து நாசிக் வழியாக புனேவுக்கு காலை 9.30 மணிக்கு வருவது வழக்கம். விமானம் வழக்கமாக காலை 8 மணிக்கு நாசிக் வந்தபிறகு காலை 9.30 மணியளவில் புனேவை சென்றடையும்.ஆனால் நேற்று இந்த விமானம் ஹைதராபாத்தில் தாமதமாக புறப்பட்டு காலை 10 மணிக்கு நாசிக் வந்தது. அப்போது விமானிகளுக்கு ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதாவது புனே விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை பராமரிப்புக்காக மூடப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். […]
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் 1940-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வான்படை தேவைக்காக விமான தளம் அமைத்தனர்.பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்தது.அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து பலாலி வழியாக கொழும்பிற்கு விமானம் இயங்கி வந்தது. இந்நிலையில் 1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது பலாலி விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த உள்நாட்டு யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்தியாவின் நிதி உதவியுடன் விமான நிலையமாக புனரமைக்கும் பணி தடைபட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஜூலை […]