2021ஆம் ஆண்டில் 45.14 பில்லியன் யுவானாக இருந்த அலிபாபா நிகர வருமானம், ஜூன் காலாண்டில் 22.74 பில்லியன் யுவானாக 50 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மந்தமான பொருளாதாரத்திற்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக, ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் இருந்து […]
உலக பணக்கார பட்டியலில் 25 ஆம் இடத்தில் இருக்கும் ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். சீனாவை சேர்ந்த அலிபாபா என்ற நிறுவனம், தற்பொழுது உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. அதன் இணை நிறுவனர் ஜாக் மா-வை பற்றி அறியாதவரே இல்லை. தற்பொழுது இ-காமர்ஸ் நிறுவனத்தில் சீனாவில் ஆய்வுகள் அதிகரித்த பின், அக்டோபர் மாத இறுதியில் ஜாக் மா-வின் தனது சொத்து மதிப்புகளில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். […]
ஜாக் மாவின் சறுக்கல்கள், சவால்கள் பல வெற்றி படிக்கட்டுகளை உருவாக்கி, தனக்கான பாதையை தானே அமைத்த ஆன்லைன் ராஜா. இன்றுள்ள தொழிலதிபர்களுக்கு உதாரணமாக விளங்கும் ஜாக் மாவின் அற்புதமான வாழ்க்கை வரலாறு. ஜாக் மா குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக செப்டம்பர் 10, 1964-ம் ஆண்டு சீனாவின் செஜியாங் நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள். இவருக்கு, ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். படிக்க […]