ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையித் அலி கமேனி இந்தியில் ஒரு ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். இதற்கு முன் பல மொழிகளில் ட்விட்டர் கணக்கைத் துவக்கியுள்ளார். அதில், பாரசீக, அரபு, உருது, பிரஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் கணக்குகளைத் துவங்கி உள்ளார். சையித் அலி ஹொசைனி கமேனி 1989 முதல் பதவியில் இருக்கும் ஈரானின் இரண்டாவது மற்றும் தற்போதைய உச்ச தலைவர் ஆவார். 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக இருந்தார் […]
சமீபத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையெடுத்து டெல்லி கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என சர்ச்சைக்குரிய வகையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷெரீப் தனது டுவிட்டரில் பதிவிட்டார். பின்னர் டெல்லியில் உள்ள ஈரான் தூதர் அலி செகனி வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு இந்தியா […]
ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என அயதுல்லா அலி காமெனி கூறினார். ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை […]