பாரிஸ் : பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஏடிபி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரானது நடைபெற்று வந்தது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் உகோ ஹம்பர்ட் இருவரும் நேற்று இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தனர். இந்த இறுதிப் போட்டி ஆரம்பித்தது முதலே விறுவிறுப்பாகவே நடைபெற்றது. இருப்பினும், ஸ்வெரேவ் தனது சிறப்பான விளையாட்டின் மூலம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தார். இதன் காரணமாக முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய […]
ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார். நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார். […]
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற நோவாக் ஜோகோவிச் தீவிரம். நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]