தென்காசி : தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடிகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதிகாப்பு கருதி, மெயின் அருவி, […]
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், கொரோனா விதிமுறைகளை கைக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனாம்பேட்டை மாநில தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க […]
ஆபத்திலோ அல்லது ஏதேனும் தேவைக்காகவோ சில அவசர எண்களை நாம் அழைப்போம். பெரும்பாலும் இந்த சேவை எண்கள் அரசு தரப்பில் வழங்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு 100,108,1098,101 போன்ற எண்களை கூறலாம். இந்த எண்கள் அனைத்துமே நம்மை ஆபத்தில் இருந்து காக்க உதவும். ஆனால், வெவ்வேறாக இருக்க கூடிய இந்த அவசர சேவைகளை இனி ஒரே எண்களின் மூலம் இணைத்து விட அரசு முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே குடைக்குள் எல்லா அவசர கால சேவைகளையும் உங்களால் பெற […]