அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநர் உஷாவை அந்தப் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. 2015ஆகஸ்டு முதல் 2017மே வரை பஞ்சாப் நேசனல் வங்கியில் செயல் இயக்குநராக இருந்த உஷா மீதும் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேசனல் வங்கியில் இருந்து விலகி அலகாபாத் வங்கியின் மேலாண் இயக்குநராக உஷா பொறுப்பேற்றுச் செயல்பட்டு வந்தார்.அந்தப் பதவி நேற்று முடிவடைய இருந்த நிலையில், அவரைப் பதவியில் இருந்து உடனடியாக நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. DINASUVADU