2022 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். கடந்த சில தினங்களுக்கு முன் ஷாஹீத் அப்ரிடி கோலியின் ஓய்வு குறித்து பேசினார், தற்போது சோயப் அக்தரும் கோலியின் ஓய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.. அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்குப்பின் விராட் கோலி டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று சோயப் அக்தர் கூறியள்ளார் . […]