உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி, சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பில் இவரது உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]
தொலைபேசி உளவு ஒரு ஜனநாயக குற்றம் என அகிலேஷ் யாதவ் ட்வீட். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து, பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை […]
விகாஸ் துபே கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா?என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், […]