தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் […]
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா உறுதி செய்ததால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன், ஒரு குறுகிய ஓய்வுக்குப் பிறகு நான் விரைவில் உங்களுடன் வருவேன் என்று தெரிவித்தார். राज्यातील नागरिक, राष्ट्रवादी काँग्रेसह राज्यातील […]
1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றசாட்டு. இந்திய-சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய-சீன எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்தது. இந்திய நாட்டின் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது துணை முதலமைச்சராக அஜித் பவார் துணை மீண்டும் பதவி ஏற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு பின் கூட்டணியை அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார் அவருடன் 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 24-ம் தேதி […]
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து கடந்த மாதம் 28-ம் தேதி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். 3 கட்சிகளின் இருந்து தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். நேற்று […]
கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.இதனால் பாஜகவின் தேவேந்திர பத்னாவிசு பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டார்.பின் இடைக்கால சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தங்களது முதல்வர் வேட்பாளராக […]
மஹாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலைமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜக அரசானது அஜித் பவார் மீது 70,000 கோடி நீர்பாசன திட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஊழல் தடுப்பு துறை அவரை விடுவித்து ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர் மீதான இந்த 70,000 கோடி […]
மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று காலை பாஜகவின் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த அஜித் பவார் மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவி ஏற்று கொண்டனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு […]
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார். மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்ற இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிராவின் வளமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார். Thank you Hon. Prime Minister @narendramodi ji. We will […]
தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பில் இருந்து அஜித்பவார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திடீர் திருப்பமாக இன்று மகாராஷ்டிரா அரசியலில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில் அவருடன் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த […]
அஜித் பவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இன்று […]