புதுடெல்லி : இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலை 3வது முறையாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் அதே பதவியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்வார்கள் என பணியாளர் நலன் அமைச்சகம் (DoPT) அறிவித்துள்ளது. கேபினட் அமைச்சருக்கான Protocol Rank உடன் NSAவாக அஜித் தோவல் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்து. […]
நாட்டில் இணையதள குற்றங்கள் 500% அதிகரித்துள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய இணையதள மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பணத்தை கையாளும் முறை வெகுவாக குறைக்கப்பட்டு உள்ள நிலையில், இணையதள பணபரிவர்த்தனையை அதிகம் சார்ந்து உள்ளதாக தெரிவித்தார். இதனால் இணையதளம் மூலம் தகவல் பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. இதுதவிர சமூக வலைதளங்கள் மூலமாக கருத்து பரிமாற்றமும் அதிகரித்து […]
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான் இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது.இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்தது. இதனை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி, லடாக் […]
நேற்று வடகிழக்கு டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் அவர் பேசுகையில், தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை அதன் கடமையை செய்து வருகிறது. காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் வன்முறை நிலைமையை சீராக்கவும் மற்றும் இயல்புநிலை திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். இந்த நிலையில் டெல்லி கலவரத்தினால் […]
இந்திய சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவில் தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு முன் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பேச்சு நடத்தியது. இந்திய- சீன எல்லை பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு வார்த்தை நடத்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-யீ, வரும் 21-ம் தேதி டெல்லி வருகிறார். பின்னர் 22-ம் தேதி தலைநகரில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஆக்ராவுக்கு மாற்ற […]