இந்திர குமார் இயக்கத்தில் அஜய் தேவ்கன் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘தேங்க் காட்’ திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்தவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். நோரா ஃபதேஹி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் தேவ்கன் இந்து கடவுளான சித்ரகுப்தனாக நடிக்கிறார்.