உலக அழகி என்ற வார்த்தைக்கு கனகச்சிதமாக பொருத்துபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் என்று கூறலாம். கடந்த 1994- ஆம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் வேர்ல்ட் ஆகிய பட்டங்களை வென்ற இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறிவிட்டார். […]