கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயம்பத்தூரில் உள்ள விமான நிலையத்தில் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வேதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் விமான நிலையத்தை விரிவுபடுத்த அருகில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது. அப்போது, முறையாக கருத்துக்களை கேட்டகவில்லை என்றும் தங்களின் எதிர்ப்புகளை பரிசீலினை செய்ய வேண்டும் எனவும் கோவை காளப்பட்டியை சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடுத்தனர். […]