கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு விமானங்களின் பட்டியல் UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்) UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் […]
பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல் சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து […]
முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருந்ததால் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டி நாணயங்களை என்ஜினில் வீசியதாக கூறினார். இதனால் அந்த பயணிக்கு இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 32 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் சார்ந்தவர் லூ சாவோ(28). இவர் விமானத்தில் பயணம் செய்ய அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று உள்ளார். அப்போது விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்த போது லூ சாவோ […]
தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்திற்கு உள்ளே சிகரெட்டை புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த ஒரு பயணி இறக்கி விடப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த விஸ்டாரா யு.கே.707 என்ற பயணிகள் விமானம் அப்போது அந்த விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றார். ஆனால் உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் சிகரெட் புகைக்க பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆனாலும் அடம்பிடித்த […]