ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் “உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை […]
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஏர் இந்தியா டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து புறப்பட திட்டமிடப்பட்ட விமானங்களின் இடைநிறுத்தத்தை அக்டோபர் 18 வரை நீட்டித்துள்ளது. வழக்கமாக டெல் அவிவ் நகருக்கு ஐந்து வார திட்டமிடப்பட்ட விமானங்களை இயக்கும் முழு சேவை, முன்னதாக அக்டோபர் 14 வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, இந்த இடைநிறுத்தம் இம்மாதம் 18ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைகளைப் பொறுத்து இந்தியர்களை திரும்ப அழைத்து […]
காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில் இன்று தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதற்கிடையில் இஸ்ரேல் அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் எதிரொலியாக டெல்லியில் இருந்து இஸ்ரேல் […]
ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு. ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு தெரிவித்துள்ளது. அதாவது, டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடாவின் கூட்டு […]
ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கு தடை. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் CHRO சுரேஷ் தத் திரிபாதி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியிடங்களில் புகைபிடிப்பதற்கும், போதைப் பொருட்களை உட்கொள்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். எனவே, ஊழியர்கள் புகைபிடித்தல், போதைப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஏர் இந்தியா ஒரு பொறுப்பான அமைப்பாகும், இந்நிறுவனம் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை வழங்குவதை […]
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராக கேம்பல் வில்சன் நியமனம். சிங்கப்பூரில் ஏர்லைன்சில் குறைந்த கட்டண துணை விமான நிறுவனமான ஸ்கூட்டின் முந்தைய தலைவரான கேம்ப்பெல் வில்சன், டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிர்வாக இயக்குனராக (MD) நியமிக்கப்பட்டுள்ளார். 50 வயதுடைய வில்சன், விமான போக்குவரத்துக்கு துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். துருக்கியின் இல்கர் அய்சி, ஏர் இந்தியாவின் தலைமை […]
டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா விமானம் விற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும், டாடா நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு 1932ல் தொடங்கியது. 1932ல் டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரில் இந்தியாவின் முதல் பயணிகள் விமான சேவையை ஜே.ஆர்.டி.டாடா தொடங்கினார். முதல் விமானத்தை ஜே.ஆர்.டி.டாடாவே கராச்சியிலிருந்து மும்பை நகருக்கு 1932ல் அக்.15ஆம் தேதி தானே ஒட்டி […]
விமானத்தை தரை இறக்குவதற்கான “நிலையான இயக்க நடைமுறைகளை விமானி பின்பற்றவில்லை” அதுவே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு தீவிரமாக பரவி வந்த நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்தனர். இதனால், மத்திய அரசு “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துபாயில் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 56 ஏர் இந்தியா ஊழியர்கள் உயிரிழப்பு. கொரோனா வைரஸ் பாதிப்பானது ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் காவலர்கள், விமான ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் என பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் […]
கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா விமான நிறுவன, இணையதள பக்கமான எஸ்ஐடிஏ-ல் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த 2011 ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் 2021 பிப்ரவரி 2-ம் தேதி வரையில் பயணம் செய்த பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என […]
வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக ஏப்ரல் 24 முதல் 30 வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனுக்கான அனைத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. […]
ஏர் இந்தியாவின் இரண்டாம் கட்ட முதலீட்டு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏர் இந்தியாவின் முதலீட்டின் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தகுதிவாய்ந்த ஏலதாரர்களின் பெயர்களை அறிவிக்கும். செயல்முறை இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டத்தில், ஆர்வமுள்ள ஏலதாரர்களால் ஆர்வத்தின் வெளிப்பாடுகள் (ஈஓஐ) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவை தகுதி அளவுகோல்கள் மற்றும் பூர்வாங்க தகவல் மெமோராண்டமில் (பிஐஎம்) குறிப்பிடப்பட்டுள்ள பிற விதிமுறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்படும். இரண்டாம் கட்டத்தில், பட்டியலிடப்பட்ட […]
அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா தனது விமானத்தை வுஹானுக்கு இயக்கவுள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய மத்திய சீன நகரமான வுஹானுக்கு தற்போது பல்வேறு, கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக இயக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி-வுஹான் நிலையத்திலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி வந்தே பாரத் மிஷன் கீழ் (விபிஎம்) விமானம் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் நேற்று […]
விமானத்தில் பயங்கரவாதி உள்ளதாக பீதியை கிளப்பிய பயணி. கோவாவுக்கு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த, ஜியா -உல்- ஹக் என்பவர் எழுந்து நின்று, தான் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து, அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இதுகுறித்து, கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து, […]
அக்டோபர் 17 முதல் 30 வரை ஏர் இந்தியா மற்றும் விஸ்டாரா விமானங்களில் ஹாங்காங்கிற்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், விமானங்களில் சில பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ததை அடுத்து இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அனைத்து சர்வதேச பயணிகளும் ஹாங்காங் விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங்கிற்கு செல்ல அரசாங்கம் தடைசெய்வது இது மூன்றாவது முறையாகும். முந்தைய தடைகள் […]
அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இரண்டு முறையாக கொரோனா பாதித்த பயணிகளை ஏற்றிச் சென்றதால் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களையும் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் அக்டோபர் 3 வரை என துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், […]
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 2,556.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு சர்வதேச விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு மே […]
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு பயணித்த ஏழு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தை மூடி,இந்த விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணையை நடத்துங்கள் என பொதுமனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஏர் இந்தியா […]
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஏர் இந்தியா […]