ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி […]
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் ரூ.600 கோடி வரை வங்கிகளில் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.ஐ.டி.பி.ஐ. வங்கியிடம் ரூ. 600 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சிவசங்கரன் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான கடன் நெருக்கடி காரணமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் தேசிய கடன் தீர்ப்பாயத்தில் திவால் மனுத் தாக்கல் செய்தது. இதை அந்த தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் […]
சில வாரங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஏர்செல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. கடைசியில், திவால் நோட்டீசை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஏர்செல். அதன்பிறகு நேற்று (வியாழக்கிழமை) ஏர்டெல் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டது. பலருக்கு அழைப்புகள் செல்லவில்லை. ஏர்டெல்லுக்கு எதிராக சோஷியல்மீடியாவில் அனல் பறக்கும் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டது ஏர்டெல். இந்நிலையில் இன்று வோடஃபோன் நெட்வொர்க்கில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பரவலாக உள்ள நகர்புறம்,புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை. சிலருக்கு சிக்னல் இருந்தும் […]
உயர்நீதிமன்றம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும்வரை சேவையை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் டிராய் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத […]
ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் இணைந்து கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனம், சேவை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிப்பது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வர இயலாத சூழலில் உள்ள ஏர்செல் நிறுவனம், தம்மை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாட்களை தங்களின் இதயமாக ஏர்செல் நிறுவனம் கருதுவதாகவும், […]
நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள் வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான தேர்வை ஏர்செல்லிலிருந்து ஏர்டெல் 2G என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாக கிடைக்கும் யுனிக் போர்டிங் கோடு(Unique […]
தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில், டெலி கம்யூனிகேசனில் பிரபலமான ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. டெலி கம்யூனிகேசனில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் பிரபலமானதாக உள்ளன. இதில் ஏர்டெல் மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களும் இதன் நெட்வொர்க்கை பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக ஏர்செல் நிறுவனத்தின் டவர் பல இடங்களில் […]
கடந்த சில தினங்களாக ஏர்செல் சேவையில் குறைபாடு இருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் ஏர்செல் செல்போன் சேவை 60% சரி செய்யப்பட்டுள்ளது என்று ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார். மேலும்,நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன், ஏர்செல் சேவையில் உள்ள பிரச்சனைகள் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்நிறுவனத்தின் சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்செல்லின் டவர்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதால் சிக்னல் தடைபட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன் நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஏர்செல் டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், சிக்னல் பிரச்சினையை சரி செய்வதற்கான […]
ஏர்செல் நெட்வொர்க் சேவை தொடர்ந்து 2-வது நாளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முழுமையாக முடங்கியதால் அவதியுற்று வரும் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று ஏர்செல் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் மாவட்ட தலைமை அலுவலம், ஈரோட்டில் ஏர்செல் சேவை மையம் ஆகியவற்றையும் முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். […]