டெல்லியின் காற்றின் தரம் ‘மோசமாக’ மாற வாய்ப்புள்ளது என்றும் பருவமழை வடமேற்கு இந்தியாவில் இருந்து விலககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை, டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் மிக மோசமாக மாற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதகமான காற்றோட்டம் நிலைமை டெல்லியில் நாளை மிதமாக வைத்திருக்கும் என்று காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது.இதற்காக ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.இதனையொட்டி டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதற்கான காற்றின் தரக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 306-ஆக பதிவாகியுள்ளது.நொய்டாவில் 356 என்று பதிவாகியுள்ளது.இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.