டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த […]
சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது. அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் […]
திருச்சி : நேற்று மாலை 5.30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகள் ஒரு தலைமை விமானி , ஒரு துணை விமானி, 4 விமான பணியாளர்கள் உடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் , வானில் பறக்க துவங்குகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாமல் நீட்டிக் கொண்டிருந்தன. இதனை அறிந்த விமானத்தின் தலைமை விமானி இக்ரோம் ரிஃபாட்லி ஃபாமி ஜைனல், உடனடியாக தகவலை திருச்சி விமான நிலையத்திற்கும், […]
திருச்சி : 144 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் நேற்று (அக்டோபர் 11) ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஹைடிராலிக் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்படவே, திருச்சியை அந்த விமானம் சுற்றும் நிலை ஏற்பட்டது. விமானத்தை அப்படியே தரையிறக்கினால் தீப்பற்றும் […]
திருச்சி : இன்று மாலை 5.40 மணியளவில் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 140 பயணிகளுடன் சார்ஜா புறப்பட்டது. விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளே இழுக்க முடியாமல் இருந்துள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறுடன் தரையிறங்குவதற்கு ஷார்ஜா விமான நிலையம் மறுத்துவிட்டது. அதன் பிறகு திருச்சி விமான நிலையம், விமானம் பத்திரமாக தரையிறங்க அனுமதி கொடுத்தது. ஆனால், உடனடியாக தரையிறங்கினால் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் எரிபொருள் காலியாகும் வரை வானில் […]
டெல்லி : இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் செய்தி அனைவரும் அறிந்ததே. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறி இருந்தது இஸ்ரேல். இப்படியான சூழலில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் அண்மையில் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரானில் வைத்து அவர் கொல்லப்பட்டதால், இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடுக்கும் […]
Air india: அமெரிக்காவில் இருந்து இந்தியாவின் மும்பை நகருக்கு வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12ம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வயது முதிர்ந்த தம்பதி மும்பை வந்தனர். Read More – உச்சம் தொட்ட இந்தியாவின் GDP வளர்ச்சி! மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதம் இதற்காக பயணச்சீட்டு முன்பதிவு செய்த போது வீல் சேர் வசதி […]
இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை […]
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியதற்கு ட்விட்டரில் டாடா குழும கவுரவ தலைவர் ரத்தன் டாடா வரவேற்பு. நஷ்டத்தில் இயங்கி வந்த இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகியுள்ளது. டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் ரூ.18,000 கோடிக்கு விற்கப்பட்டதாகவும், ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி […]
டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்நிறுவனத்திடமே செல்கிறது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஜே.ஆர்.டி.டாடா தொடங்கிய டாடா ஏர்மெயில், டாடா ஏர் லைன்ஸாக மாறியபின் ஏர் இந்தியாவாக உருவாகியது. இந்தியாவின் முதல் விமான நிறுவனமான […]
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள். இதனால்,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் இன்று காலை அறிவித்தனர்.இதனால்,ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் […]
விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 64 பயணிகளுடன் தரையிறங்கும் போது மின் கம்பத்தில் மோதியது. விமானத்தின் சிறகு ஓடுபாதையின் அருகில் இருந்த கம்பத்தில் மோதியது. விமானி குழப்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விமானத்தில் பயணம் செய்த 64 பயணிகளும் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று மாநிலங்களவையில் கூறியதாவது, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, பல்வேறு மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூ .498.17 கோடி பாக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மொத்தம் வி.வி.ஐ.பி பயணத்திற்கு 84.57 கோடி ரூபாயும், வெளிநாட்டில் சிக்கியவர்கள் மீட்பு பயணத்திற்கு 61 12.61 கோடியும், நிவாரண நடவடிக்கைகளுக்கு 9.67 கோடி ரூபாயும், நிலுவைத் தொகையாக 391.32 கோடி ரூபாயும் உள்ளது […]
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். “மேட் இன் இந்தியா” டேப்லெட் கணினியைப் பயன்படுத்தி சீதாராமன் 2021 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது கோரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இன்று பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை , ரயில்வே உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒத்துக்கப்பட்ட பொதுத்துறை […]
டெல்லியில் இருந்து சிட்னிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இருப்பினும் மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் முதல் இயங்காமல் இருந்த விமானங்கள் சில கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் முதல் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. இதன்படி ஐந்தாம் கட்ட தளர்வாக வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியிலிருந்து […]
ஹாங்காங்கில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்தவர்கள் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. […]
ஏர் இந்தியா செப்டம்பர் -17ஆம் தேதி சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளது. ஈராக்கில் உள்ள பாஸ்ராவிலிருந்து புதுடெல்லிக்கு செப்டம்பர்- 17 ஆம் தேதி வந்தே பாரத் மிஷனின் கீழ் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு ஏர் இந்தியா சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாக இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், இந்திய பயணம் செய்ய விரும்பும் அனைத்து இந்தியர்களும் தங்களை தூதரகத்தில் புதிதாக பதிவு செய்து செப்டம்பர்-12 தேதிக்குள் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் […]
ஒரே ஒருவரை தவிர விமானத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். அவர் விமானத்தினுள் சிக்கியுள்ளார். ஆனால், அவர் பத்திரமாக இருக்கிறார். – எம்.பி E.T.முகம்மது பஷீர். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. இதில், ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். படுகாயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவமனை […]
கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார். துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் […]
0483 271949, 0483 2736320, 0495 2376901 என்கிற உதவி எண்களை தொடர்புகொண்டு பயணித்தவர்களின் விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் – கேரள அரசு அறிவிப்பு. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக பயணித்தவர்களின் விவரங்கள் அறிய கேரள அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை கட்டுப்பாட்டு மையம்- […]