மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பெரும் கிளர்ச்சி நடத்த விவசாயிகள் தயாராகி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோ நோக்கி விவசாயிகள் அணிவகுக்க உள்ளனர். “சலோ லக்னோ” என்கிறபெயரில் நடைபெறவிருக்கும் இந்த அணிவகுப்புக்கான தயாரிப்புகளில் விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மார்ச் 15ல் லக்னோவில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா, சிபிஎம் அரசியல் […]
பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் அகில விவசாயிகள் சங்கம் சார்பில் ஆசிக் முதல் மும்பை வரையிலான 200 கிமீ பேரணியாக சென்றனர். இந்நிலையில் ஆளும் பிஜேபி அரசுடன் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்றது.பின்னர் விவசாயிகளின் அத்தனை கோரிக்கைகளையும் பிஜேபி அரசு ஏற்றுகொண்டது. மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ஆளும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான […]
அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசி உள்ளிட்டு 35,000 மக்கள் அனைவரும் பேரணியாக 200 கி.மீ கடந்து மும்பை நகரை வந்தடைந்தனர். இந்நிலையில் அதிகாலை தொழுகை முடிந்த கையோடு உழைத்து களைத்து போய் வெறும் காலோடும்,வெந்த புண்ணோடும் வரும் விவசாயிகளையும் ஆதிவாசிகளையும் ஆகாரம் கொடுத்து ஆசுவாசப்படுத்த காத்திருக்கும் எமது இஸ்லாமிய பெருமக்கள். அதேபோல் சீக்கியர்கள் குருத்வாராக்களில்,தலீத்கள் தத்தமது குடிசைகளில் இது போன்றே உபசரித்து […]
அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின்(AIKS) தலைமையில் கடன் தள்ளுபடி,விலை நிர்ணயம் மற்றும் வனச்சட்டம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் ஆதிவாசிகள் மும்பையை நெருங்கி விட்டனர். இன்று இரவில் மத்திய மும்பையில் உள்ள சோமையா மைதானத்தில் சங்கமம் ஆகின்றனர். நாளையதினம் சட்டமன்ற(விதான் சபா)முற்றுகையில் ஈடுபடுவர். செவ்வாய் கிழமை நாசிக்கில் இருந்து துவங்கிய இந்த நீண்ட பயணம் ஒவ்வொரு 30 கி.மீ. பயணித்தது. சுட்டெரிக்கும் வெயில். வரும் வழியில் பொதுமக்கள் பல உதவிகளையும், உபசரிப்பையும் நல்கினர்.சிவசேனா, மகாராஷ்டிரா நிர்மாண் சேனா,சரத்பவாரின் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில் சுமார் 3000 பேர்க்கு மேல் கலந்துகொண்டனர்.