டெல்லி : பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், கல்லூரிகள் என பலவேறு கல்வி அமைப்புகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2023-2024 கல்வியாண்டில் கல்லூரிகளின் செயல்பாடுகளை கொண்டு தற்போது மத்திய அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடுள்ளது. இந்த தரவரிசையில் […]
ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு, அரைநாள் விடுமுறையை வாபஸ் பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை (ஜன.22-ம் தேதி) உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஜனவரி 22-ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பங்கு சந்தைகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றுக்கு அரை நாள் […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வைரல் காய்ச்சல் காரணமாக கடந்த டிச-26இல் டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகள் NIRF இந்திய தரவரிசை 2022 இன் படி நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரியாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்-டெல்லி முதலிடத்தில் உள்ளது(aiims delhi). அடுத்தபடியாக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2இடத்திலும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடத்திலும் உள்ளது. இதைத்தொடர்ந்து, […]
புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார். ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா […]
இந்தியாவிலேயே முதன்முதலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்து சுகாதார தொழிலாளி மணீஷ் குமார் என்பவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வரும் நிலையில், தற்போது பல இடங்களில் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவைகளில் சிலவற்றிற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தற்பொழுது முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பெற்றுக் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்க்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், டெஹ்ரா-டுனில் உள்ள டூன் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். இதனையடுத்து அவர், நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை […]
கோவாக்சின் முதல் அளவை 30 வயது ஆணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. ஐ.ஐ.எம்.எஸ் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் முதல் அளவை 30 வயது ஆணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது. மனித சோதனைகளைத் தொடங்க மருத்துவ நிறுவனம் ஒப்புதல் பெற்ற சில நாட்களுக்குப் பிறகுஇரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படும் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் சோதனை double-blind மற்றும் மருந்துப்போலி கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக […]