புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவிப்பு. 2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை நீடிக்கப்படுகிறது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்து AI, Machine Learning உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளுக்கு மட்டும் 2024 வரை அனுமதி அளிக்கப்படும் என்றும் AICTE தெரிவித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. B.E.,B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தும்,அதிகரித்தும் காணப்படுகிறது.இதனால், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு(AICTE) பிறப்பித்துள்ளது. மேலும்,கல்லூரிக்கு வருகை புரியும் மாணவர்கள்,ஊழியர்கள் என அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனி மனித […]
பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது. இதுதொடர்பாக UGC & AICTE வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், பாக்கிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்தியரும் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறவோ அல்லது உயர்கல்வி படிப்பை தொடரவோ தகுதி பெற […]
இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலை கல்வி நிறுவனங்கள் விரைவில் பிளம்பிங் படிப்பு. இந்திய அளவில் பொறியியல் கல்லூரிகளை வழிநடத்தும் AICTE அமைப்பு தற்போது புதியதாக ஒரு பாடத்தை சில முக்கிய இன்ஜினீரிங் பிரிவில் சேர்த்துள்ளது. அதனை பொறியியல் மற்றும் கட்டிடக்கலை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது, பிளம்பிங் தான் அந்த கூடுதல் பாடம். அதனை மாணவர்கள் விருப்ப தேர்வின் படி தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விருப்ப தேர்வானது, ஆர்க்கிடெக்சர், இன்டீரியர் பிரிவுக்கும், மெக்கானிக்கல் […]
உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உக்ரைனில் இருந்து பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் வி-சிக்களுக்கும், ஏஐசிடிஇ-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்,உக்ரைனில் இருந்து திரும்பிய சுமார் 20,000 மாணவர்களின் கல்வி எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை […]
பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு. 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது. அதன்படி,குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது. மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் […]
முதலாம் அண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு. நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கவும், இறுதிக்கட்ட கலந்தாய்வு ஜூலை 20 அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். ஆகஸ்ட் […]
அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக பள்ளி,கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக பாடம் படித்து வருகின்றனர். இந்நிலையில்,கல்லூரிகளின் புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ நிர்வாகம் திருத்தி வெளியிட்டுள்ளது.அதன்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுகலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூன் 30 கடைசித் தேதி ஆகும். […]
நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேருவதற்கான கடைசி தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) தெரிவித்துள்ளது. நாட்டில் நீண்டகாலமாக வெளிவரும் நிலைமைகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் சேருவதற்காக அவகாசம் நவம்பர் 30, வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதற்கான கடைசி தேதி டிசம்பர் […]
‘நீட்’டில் கைவிட்டது போல் இல்லாமல் மாணவர்களை அரசு காக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் […]
தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி […]
அரியர் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் எந்த கடிதமும் தமிழக அரசிற்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் கூறியதை அடுத்து மாணவ, மாணவர்கள் முதல்வருக்கு சமூக […]
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் தேர்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. அதில் இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளை தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக […]
B.E. மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகளை தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வருவதால் நாடு முழுவதும் பொதுமுடக்கம் 3 ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசு தேர்வுகளும் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பின்னர் இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளி, கல்லூரி எப்போது திறக்கப்படும் என்றும் தேர்வுகள் நடைபெறுமா? […]