பழனிசாமி பெயருக்கு எதுவும் மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு. தொண்டர்கள் மூலம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் பல்வேறு பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார் என்றும் ஓபிஎஸ் குற்றசாட்டினார். மேலும், அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த முடிவை எடுத்திருக்கிறதோ […]
வெல்லமண்டி நடராஜன் உள்பட நான்கு பேரை அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளாக வெல்லமண்டி என் நடராஜன், ஆர்டி ராமச்சந்திரன், சி திருமாறன், ஆர்வி பாபு ஆகிய 4 பேர் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி, விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு. அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை […]
பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமையில் நடைபெறும் முதல் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியீடு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் […]
தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் அதிமுக தொடர்ந்து அழிவை நோக்கி செல்கிறது என சசிகலா அறிக்கை. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை செயல்படாமல் தடுப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுக, எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு […]