தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி […]
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கம். அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. அதுவும், காணாமல் போன 113 ஆவணங்கள் சிபிசிஐடி போலீசார் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதில் குறிப்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் […]
அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. புதிய பேனர்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதிமுக தலைமை அலுவலத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்து சென்ற ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி […]
அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிசிடி போலீசார் விசாரணை. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வன்முறை தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி மகாலிங்கம் விளக்கமளித்து வருகிறார். கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளை […]
அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என காவல்துறை தரப்பில் தகவல். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சுமார் 72 நாட்களுக்கு பிறகு, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார். எடப்பாடி பழனிசாமியுடன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் சென்றிருந்தனர். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஈபிஎஸ், ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான குற்றசாட்டுகளை முன்வைத்தார். […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாளை காலை செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாளை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை […]
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் காணவில்லை என தகவல். கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மூடி சீல் வைத்தார். இதன்பின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து […]
ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றி, அதன் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கும் வகையில், கட்சி தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைமை […]
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதுக்கு எதிரான வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழுவின் போது கட்சி அலுவலகத்தில் வன்முறை நடந்ததால் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தார். இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் […]
அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு. அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் என கூறி அவற்றையும் தாக்கல் செய்தது காவல்துறை. இதனால் காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அலுவகலகத்திற்கு […]