சென்னையில் அக்.9ம் தேதி அதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ‘உழைப்பவரே உயர்ந்தவர்’, ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, அதிமுக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு […]
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்திப்பு நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்திருந்த நிலையில், தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இபிஎஸ்-ஐ தமிமுன் அன்சாரி சந்தித்து பேசியிருப்பது, கூட்டணி தொடர்பாக இருக்கும் என கூறப்படுகிறது . இந்த சந்திப்பின்போது, எஸ்.பி.வேலுமணி, […]
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடனான கருத்து மோதலால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கூட்டணி முறிவு பாஜக தலைமைக்கு பேரிடியாக அமைந்தது. கணிசமான இடங்களில் வெற்றி பெற என்று நினைத்து வந்த நிலையில், பாஜகவை அதிமுக கழட்டிவிட்டது. இந்த கூட்டணி முறிவுக்கு பிறகு இரு கட்சி தலைவர்களும் மவுனம் காத்து வந்தனர். இதனால், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு நிரந்தரமா? அல்லது தேர்தலில் நேரத்தில் மீண்டும் ஒன்று சேருமா? […]
அதிமுக-பாஜக முறிவுக்கு பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்ற நிலையில், அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில், இன்று சென்னையில் பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து இன்னும் சென்னை திரும்பாததால், இந்த […]
திமுக அரசு, கர்நாடக அரசை கண்டித்து வரும் 6ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காவிரி நதிநீர் பிரச்சனை விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே விஸ்பரூபம் எடுத்துள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசானது காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் , உச்சநீதிமன்றம், மத்திய அரசு வரை சென்று தொடர்ந்து […]
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, பல்வேறு நடவடிக்கையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமியை தலைவராகவும், முதல்வராகவும் ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் […]
தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகு அனுப்பிய கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுத்து அதிமுக தலைமை அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அனுப்பிய கடிதத்தை பெற மறுப்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி […]
இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து. புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இருளும், சோகமும் விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசம், நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றியை இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.
பழனிசாமி பெயருக்கு எதுவும் மத்திய அரசால் அனுப்பப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு. தொண்டர்கள் மூலம் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இடையில் பல்வேறு பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமி உருவாக்கினார் என்றும் ஓபிஎஸ் குற்றசாட்டினார். மேலும், அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் எந்த முடிவை எடுத்திருக்கிறதோ […]
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை குறிப்பிட்டு அதிமுகவுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரிமோட் வாக்குப்பதிவு முறை தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்திற்கு மாநில தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை […]
செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் காலமானதை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் இரங்கல். பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியக் கழக முன்னாள் செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான பி.கொளஞ்சிநாதன் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம்கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு அன்புச் சகோதரர் கொளஞ்சிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். […]
பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் […]
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகியிடம் இருந்து 1 லட்ச ரூபாய் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று அதிமுக அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் அதிமுக நிர்வாகி வைத்திருந்த 1 லட்ச ரூபாய் திருடுபோயுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட தெற்கு ஒன்றிய அதிமுக துணைச்செயலாளர் […]
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், உட்கட்சியில் எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ், தினகரன், சசிகலா பற்றி பேசி நாங்கள் நேரத்தை வீணடிக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு […]
அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என ஜெயக்குமார் பேட்டி. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளியோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், […]
ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு. சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் […]
எடப்பாடிபழனிசாமி தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது. அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பழனிசாமி ஆலோசனையில் நடத்துகிறார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக வளர்ச்சி பணிகள், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை. அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கடந்த சில […]
அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா பேட்டியளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் இரங்கலை எம்ஜிஆர் நினைவிடத்தில் செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என குறிப்பிட்டார். மேலும் அவர் […]