சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அஞ்சலி செலுத்துவதற்கு வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று காலை முதலே சென்னை, மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் பலர் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்திவிட்டு செல்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி […]