லண்டன் : மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட், ஒரு பெண்ணை காதலிப்பதை நாம் எந்திரன் படத்தில் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால், நம்மை சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்த கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI […]
எலோன் மஸ்க் : ஏஐ வீடியோக்களிலேயே இதுதான் சிறந்த வீடியோ என்பது போல் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தளத்தை கலக்கி வருகிறது. அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோவில், உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அதில், அமெரிக்காவில் நடந்து […]
சென்னை : ChatGPTயின் அடுத்தகட்ட வளர்ச்சியாக GPT-4o அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஏற்கனவே ChatGPT எனும் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம் . GPT 4-இன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக GPT 4o எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் […]
DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை, கண்டறிய OpenAI தனது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கிறது. விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை தாயர் செய்யும் DALL-E 3 உள்ளிட்ட AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கண்டறிய, ஒரு புதிய தொழில்ட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓபன் ஏஐ என்றால் என்ன? OpenAI என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆராய்ச்சி நிறுவனமாகும், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், நன்மை பயக்கும் AI தொழில்நுட்பங்களை […]
Election2024 : இந்திய தேர்தலை AI தொழில்நுட்பம் மூலம் சீனா சீர்குலைக்க நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நியாமான முறையில் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், வாக்கு இயந்திர ஒப்புகை சீட்டையும் கணக்கில் கொண்டு […]
PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு […]
WhatsApp : வாட்ஸ் அப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தங்களது பயனர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட்டுகள் மூலம் கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், தற்போது வாட்ஸ் ஆப்பில் AI அம்சத்தை கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, AI வசதியுடன் இயங்கும் புகைப்பட எடிட்டிங் அம்சத்தை வாட்ஸ் அப்பில் கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அம்சங்கள் […]
Devin : டெவின் என்ற உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் என்ஜினீயரை பிரபல நிறுவனமான காக்னிஷன் (Cognition) அறிமுகம் செய்தது. இதுவரை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் புது புது அம்சங்களுடன் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், உலககின் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏஐ மென்பொருள் இன்ஜினியர் அறிமுகமானார். Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo! வித்தியாசமான படைப்பு: ஏஐ […]
Apple : தற்போதைய தொழில்நுட்ப உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு AI இருந்து வருகிறது. இனி தொழில்நுட்ப எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தான் என்ற தோற்றம் உருவாகி மக்களும் அதனை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றனர். இதனால் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களும் தங்கள் பயனர்களிடன் விருப்பத்திற்கேற்ப புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது. அதனை மேம்படுத்துவது என நகர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தாங்கள் தயாரிக்கும் கருவிகளில் […]
தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..! தமிழக அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். அதன்படி, செயற்கை […]
இந்த நவீன கால உலகத்தில் புது புது தொழில்நுட்ப அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வர தொடங்கியுள்ளது. இதனால் உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் […]
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டெல்லி போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணுடைய முகத்தில் வைத்து மார்பீங் செய்யப்பட்டு மாற்றப்பட்டது. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து கத்ரினா கைஃப் கஜோல் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இப்படி, நடிகைகளுக்கு இந்த மாதிரியான வீடியோக்கள் […]
இந்த காலத்தில் ஏஐ (AI)யின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை காரணம் காட்டி பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் தங்களுடைய நிறுவனங்களில் இருக்கும் 1, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பல வகையில் நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நம்மளுடைய மனிதக் குலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த ஏஐ (AI) மனிதர்கள் கணினிகளில் செய்யும் […]
AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
ஜெட் வேகத்தில் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வந்துள்ளது AI (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பம் , சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பல்வேறு செய்திகள், வதந்திகள், வேலை குறித்த ஆய்வுகள் என தொழில்நுட்ப உலகமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இது இந்த தொழில்நுட்ப மாற்றம் என்பது AI வந்ததால் மட்டும் நிகழவில்லை. இது அவ்வப்போது, புதிய புதிய தொழில்நுட்பம் உருவாகும் போது, தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி பாதையை […]
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் […]
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]
தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அசுர வளர்ச்சி அடைந்து வரும் தொழிநுட்பமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கோடிங் என பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏஐ, இப்போது எடிட்டிங்யிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது கிரியேட்டர்களுக்கு உயர்தர கன்டென்ட்களை உருவாக்குவதை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்குகிறது. அந்தவகையில் ரன்வே எனப்படும் ஒரு ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மோஷன் பிரஷ் என்ற […]